:: குறையெலாம் தீர்ந்திட குழுமணிக்கு வாருங்கள் ::
சக்தி என்றாலே தேவிதான்.அத்தேவி, பல காலங்களில், பல ரூபங்களில் தோன்றி, அருள்புரிகிறாள். அவ்வாறு அருள்புரியும் சக்தியே 'பிரத்யங்கிரா தேவி'! கலியுகத்தில் கண் கண்ட தெய்வமாய் இருந்து, தன்னிடம் வந்து பணிந்து வேண்டுவோருக்கு நல்லன எல்லாம் தந்து மகிழ்பவர் 'பிரத்யங்கிரா தேவி. இச்சக்தி அபரிதமான சக்தி கொண்டவள். எல்லா இடத்திலிருந்து ஆட்சி புரிபவள். முக்காலத்திலும் அருள்புரிபவள்.இவள் திருவடிகளைப் பற்றி "தாயே 'பிரத்யங்கிரா தேவி, நீயே கதி என்று ஆழ்ந்த பக்திடனும் தூயமதுடனும் சரணடைவோருக்குச் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்குபவள்.இவள் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், முதியவர், இளையவர், ஆண், பெண் என்ற பேதம் பாராதவள்.தன்னைத் தஞ்சமடைந்தவர்க்குத் தட்டாமல் உதவிடும் தயாபரி. தன்னடியை நாடிவருபவர் நல்லவரா? கெட்டவரா என்று ஆராயாமல் நற்பலனை வாரி வழங்கும் கருணைக்கடல்.இத்தகைய சிறப்புமிகு தேவி, 'நலிந்தோர், வலுவிழந்தோர் நாடிவந்து வேண்டினால் நாளும் நலம் தருவேன்' என்று வாக்குத் தந்து அருள்தரும் புனித இடமே குழுமணி.வாருங்கள். குழுமணித்தாய் ஸ்ரீ ஜய மங்கள மஹாப் பிரத்யங்கிரா தேவி - யைப் பணிந்து பல வரங்கள் பெறுவோம்.
history